நெல்லை: வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நெல்லை உள்ளிட்ட 7 மாவட்ட அதிகாரிகளுக்கு இன்று மதுரையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ம் தேதி நடந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 91 மையங்களில் வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மண்டலம் வாரியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் இன்று நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். இதில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், நேர்முக உதவியாளர்கள், (தேர்தல்) தொகுதி தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், ஒவ்வொரு தொகுதிக்கும் முதன்மை பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பயிற்சி பெறும் முதன்மை பயிற்சியாளர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்தந்த தொகுதிகளில் பயிற்சி அளிப்பர் என தேர்தல அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment