background img

புதிய வரவு

அமெரிக்கா செயல்: முஷாரப் கோபம்

லண்டன்: "ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மீறிவிட்டது. எந்த நடவடிக்கையானாலும், கிலானி தலைமையிலான அரசையும் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்' என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் எல்லையைக் கடந்து அப்போதாபாத் வரை அமெரிக்க வீரர்கள் வந்து நடவடிக்கை எடுத்ததை ஒப்புக் கொள்ள முடியாது. அது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல். அன்னியப் படைகள் பாக்., எல்லையைக் கடப்பதை பாக்., மக்கள் விரும்பமாட்டார்கள். அமெரிக்கப் படைகள் இந்த நடவடிக்கையை எடுத்ததும் சரியல்ல. பாகிஸ்தான் அரசுடன் இதுபற்றி கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அல் - குவைதா மற்றும் தலிபான்களுடன் பாக்., போரிடுகிறது. பின்லாடன் எப்படி அப்போதாபாத்துக்கு வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவருடன் உள்ளூர் அதிகாரிகள் தொடர்பு வைத்திருப்பர் என்று நான் கருதவில்லை. ஆனால், உள்ளூர் மக்கள் தொடர்பில் இருந்திருக்கக் கூடும். இவ்வாறு முஷாரப் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts