background img

புதிய வரவு

சோனியா காந்தி வீட்டு முன் தற்கொலை முயற்சி

டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டு முன் நேற்று மாலை ஒருவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அவர் தீக்குச்சியை பற்ற வைக்க முயன்ற போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்கள்.

விசாரணையில் அந்த நபரின் பெயர் ராஜேஷ் என்றும், உத்தரபிரதேச மாநிலம் சாகிபாபாத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

வங்கியில் கடன் பெற முயன்றதாகவும், அது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் விசாரணையின் போது அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts