background img

புதிய வரவு

2.பத்ம உஜ்ஜயி

2.பத்ம உஜ்ஜயிசெய்முறை:


பத்மாசனத்தில் இருந்தபடியே கைகளை மேலே தூக்கி கைவிரல்களை கோர்த்துக் கொள்ளவும். அப்படியே புரட்டி உள்ளங்கைகள் மேலே பார்க்குமாறு வைத்து வாயை மூடி மூச்சை ஒரே சத்தமாக வெளியே தள்ளவும். 10 அல்லது 15 முறை செய்யவும். பத்ம உஜ்ஜயியில் மூச்சை தள்ளும்போது நுரையீரலுக்கு அதிக காற்று உட்செல்கிறது. இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது. பந்து அடிவயிற்றிலிருந்தது கிளம்பி மூக்கு வழியாக வருவதுபோல் நினைத்து காற்றை வெளியே வேகமாகத் தள்ளவும்.


பலன்கள்:


ஆஸ்துமா, சைனஸ் தொல்லைகள், ஒருபக்க தலைவலி, கண்பார்வை கோளாறுகள், காதுநோய் முதலியவை அகலும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகி, சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும் உண்டாகும். எந்த நேரமும் இன்பமான மனஉறுதி உண்டாகும். இதய பலவீனம் அகன்று பலமாகும். பெண்களுக்கு முடி கொட்டுவது நிற்கும். முடி வளரும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts