background img

புதிய வரவு

காங்கிரசுக்கு இனி வசந்த காலம் : தங்கபாலு பேச்சு

காஞ்சிபுரம் : காங்கிரஸ் கட்சி யாருக்கும் தலை வணங்காது. வரும் காலம் காங்கிரஸ் கட்சிக்கு வசந்த காலமாக இருக்கும் என, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், நடந்த ஓ.வி. அளகேசன் நூற்றாண்டு விழாவில் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவையொட்டி மறைந்த தலைவர்களுக்கு விழா எடுக்கப்படுகிறது. காமராஜர், கக்கன், சி. சுப்பிரமணியம், சட்ட நாதன் கரையாலர் ஆகியோருக்கு விழா எடுத்தோம். தற்போது ஓ.வி. அளகேசன் நூற்றாண்டு விழா காஞ்சிபுரத்தில் கொண்டாடப்படுகிறது. அவர் கண்டிப்பானவர். நேர்மையானவர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து, காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்தியவர். மத்தியில் காங்கிரஸ் அரசு சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 71 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் மத்திய அமைச்சர் சிதம்பரம். காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் இன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் போது நாடு வளர்கிறது. காங்கிரஸ் வீழ்ந்தால் நாடு வீழ்கிறது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசாகவும், காங்கிரஸ் அரசு திகழ்கிறது. காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது. யாருக்கும் தலை வணங்காது. அன்புக்கு அடி பணிவோம். ஆதிக்கத்திற்கு தலை வணங்க மாட்டோம். சோனியாவையும் , ராகுலையும் மதிப்பவர்களை மதிப்போம். எதிர்ப்பவர்களை எதிர்ப்போம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முதன்மை கட்சியாக வர வேண்டும் என விரும்புகிறோம். வரும் காலம் காங்கிரஸ் கட்சிக்கு வசந்த காலமாக இருக்கும். இவ்வாறு தங்கபாலு தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts