background img

புதிய வரவு

திருட்டு டிவிடிக்களை ஒழிக்க முடியவில்லை : பிரகாஷ்ராஜ் வேதனை

எவ்வளவு சட்டங்கள் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்தாலும் திருட்டு டிவிடிக்களை ஒழிக்க முடியவில்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனையுடன் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எனது ஒவ்வொரு படமும் வெளிவரும்போது பொதுமக்களை திரையரங்குகளில் நேரிடையாக சென்று சந்திக்கிறேன். இந்த சந்திப்பின் மூலம் மக்களின் விருப்பு, வெறுப்புகளை தெரிந்து கொண்டு தொடர்ந்து நான் நல்ல தரமான படங்களை எடுக்க விரும்புகிறேன். தற்போது உலக அளவில் தீவிரவாதம் வளர்ந்து வீடு வாசல் வரைக்கும் வந்துவிட்டது. விமான கடத்தல் போன்ற தீவிரவாத சம்பவத்தை நாம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம். இதில் அந்த இடத்தில் விமானத்தில் நாம் பயணம் செய்தால் எப்படி இருக்கும், அந்த சம்பவத்தின் நிகழ்வுகளை தான் Ôபயணம்Õ படத்தில் சொல்லிருக்கிறோம். படத்திற்கு உள்ள வரவேற்பை அறிய திரையரங்குகளுக்கு செல்ல உள்ளேன்.

இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் பல போராட்டங்களுக்கிடையே படம் எடுக்க வேண்டியுள்ளது. புதுமுகங்களை வைத்து படம் எடுக்கும் போது போராடி தான் படம் எடுக்கிறோம். ஆனால் படம் வெளிவந்த ஒரு சில நாட்களிலே திருட்டு சி.டி.க்கள், டி.வி.டி.க்கள் கடைகளில் விற்க தொடங்கிவிடுகின்றன. திருட்டு டி.வி.டி.க்கள் வெளிவருவதை தடுக்க எவ்வளவோ தடைகளை கொண்டு வந்தாலும் வெளிவருவது வந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுமக்கள் தான் திருட்டு டி.வி. டி.க்களில் படம் பார்க்காமல் இருக்க வேண்டும். தமிழக அரசும் திருட்டு டி.வி.டி.க்களை ஒழிக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதன் மூலம் திருட்டு சி.டி., டி.வி.டி.க்களை ஒழிக்க முடியும். எனது அடுத்தபடம் பற்றி இன்னும் முடிவுசெய்யவில்லை, என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts