மத்திய மந்திரி ஜி.கே.வாசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
லிபியாவில் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முனைப்புடன் செய்து வருகிறது. அவர்கள் வழிகாட்டுதலில் கப்பல்துறை அமைச்சரும் ஏற்கனவே காட்டியா என்ற கப்பலை லிபியாவுக்கு அனுப்பிவைத்தது. அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக துறைமுகங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை மந்திரி கிருஷ்ணா, வெளிநாட்டுவாழ் இந்திய நலத்துறை மந்திரி வயலார் ரவி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி மற்றும் நான் இந்தியர்களை மீட்பது குறித்து பேசி, தற்போது இந்திய கப்பல் படையைச் சேர்ந்த 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் லிபியாவிற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபடும். கடந்த 7 ஆண்டுகளாக சோனியா வழிகாட்டுதலின் பேரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று வெளியிடப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டிலும் தமிழ் நாட்டுக்கான திட்டங்கள், ஆய்வு செய்ய வேண்டிய திட்டங்கள் பற்றி அறிவித்துள்ளது. தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக செயல் படுத்தி வருகிறது. காங்கிரஸ் இயக்கம் அகில இந்திய அளவில் வலுவான இயக்கமாக உள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரசில் இணைந்து வருகிறார்கள். இன்று எனது முன்னிலையில் மதுரவாயல் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 250 பெண்கள் நகரசபை தலைவர் சேகர் தலைமையில் இணைந்துள்ளனர். இதேபோல கவுண்டம் பாளையத்தில் இருந்தும் 63 பேர் காங்கிரசில் இணைந்துள்ளனர்.
இவ்வாறு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.
நிகழ்ச்சியில் டில்லி, தயாளன், மால்மருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment