background img

புதிய வரவு

அ.தி.மு.க., கூட்டணியை மக்கள் வெற்றி பெறச்செய்வர் : பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன்

உடுமலை : ""ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடித்த பணம் முழுவதும் தி.மு.க.,வினர் தேர்தலில் செலவழித்தாலும், புரட்சிக்கு தயாராக இருக்கும் மக்கள், அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச்செய்வர்,'' என பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசினார்.
உடுமலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் சண்முகம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து கட்சியின் மாநில தேர்தல் பிரிவு செயலாளர் ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது: உடுமலை நகராட்சியில் கடந்த நான்காண்டில் 180 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து, தாதாக்கள் அட்டகாசத்தை வளர்த்த தி.மு.க. நகராட்சி தலைவர், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவில்லை. பாதாள சாக்கடை, மேம்பாலம், பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பு என மக்களிடம் வரிப்பணத்தை கொள்ளையடித்து தி.மு.க.,வினர் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.
தி.மு.க., அமைச்சர்கள் தங்கள் ஊழல் பணத்தில் சொத்துகளை குவிக்க, இடைத்தரகராக செயல்பட்ட உடுமலை நகராட்சி தலைவர், தற்போது தொழிலதிபராக மாறியுள்ளார். 2 ஜி., ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தமிழகம் முழுவதும் பல்வேறு பினாமிகள் மூலம், பல தொழில்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தலில் பட்டுவாடா செய்ய பல கோடி ரூபாயை தி.மு.க.,வினர் பதுக்கியுள்ளனர். ஓட்டுக்கு எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் மக்கள் இம்முறை தி.மு.க., வை புறக்கணிக்க முடிவெடுத்து விட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முழுவதும் தேர்தலில் செலவழித்தாலும், புரட்சிக்கு தயாராக இருக்கும் மக்கள், அனைத்து தொகுதியிலும், அ.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச்செய்வர். இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் மாவட்ட செயலாளர் சண்முகவேலு பேசுகையில், ""உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடை, தளி ரோடு மேம்பாலம், பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பு ஆகிய முக்கிய திட்டங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டங்களை நிதி மட்டும் ஒதுக்கிய தி.மு.க., எவ்வித பணிகளையும் முறையாக மேற்கொள்ளவில்லை.
""நகராட்சிக்கு சொந்தமான நிலங்களை மீட்பதாக கூறி அவற்றை கட்டப்பஞ்சாயத்து மூலம் தங்கள் சொத்துகளாக மாற்றிக்கொண்டனர். பாரம்பரியமிக்க உடுமலை நகராட்சி சீர்கேடு அடைந்துள்ளது. தங்கள் கோஷ்டி மோதலுக்காக டி.எஸ்.பி.,யை தாக்கியது மட்டுமே தற்போதுள்ள தி.மு.க., நிர்வாகிகளின் சாதனையாகும்,'' என்றார்.
கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் செ.ம.வேலுச்சாமி எம்.எல்.ஏ., பேசுகையில், ""தமிழக மக்களை நிரந்தர கடனாளியாக மாற்றியதே தி.மு.க., அரசின் சாதனை. மின்வெட்டு பிரச்னையால் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
""ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை மாநிலத்திற்கு சேர்த்து விட்டு, கருணாநிதி குடும்பத்தினர் அதை விட பல மடங்கு அளவு பணத்தை கொள்ளையடித்துள்ளனர். ஊழல் பணத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தி.மு.க.,வினர் மறைமுகமாக உதவுகின்றனர். தமிழக மக்கள் புரட்சிக்கு தயாராகியுள்ளனர். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வை வெற்றி பெற செய்ய மக்கள் முடிவெடுத்து விட்டனர்,'' என்றார். ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts