ஏற்கனவே 2 ஆஸ்கார் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த தடவை 2 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தார். “127 ஹவர்ஸ்” என்ற படத்துக்கு இசை அமைத்ததற்காக சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் இசை ஆகிய 2 பிரிவுகளில் அவரை விருதுக்கு பரிந்துரை செய்து இருந்தனர். ஆனால் இந்த இரு பிரிவுகளிலுமே அவருக்கு விருது கிடைக்கவில்லை.
சிறந்த பின்னணி இசை பிரிவில் “தி சோசியல் நெட்வொர்க்” படத்துக்கு இசை அமைத்த டிரன்ட் ரேஸ்னர், ஆட்டிகஸ்ரோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை தட்டி சென்றனர். சிறந்த பாடல் இசை பிரிவில், “டாய் ஸ்டோரி-3” என்ற படத்தில் “வி பிலாங் கு கெதர்” என்ற பாடலுக்கு இசை அமைத்த ரேன்டி நியூமென் விருதை பெற்றார். எ.ஆர்.ரகுமானுக்கு இந்த தடவையும் விருது கிடைக்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் விருது கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
“தி பைட்டர்” படத்தில் நடித்த கிறிஸ்டியன் பாலேவுக்கு சிறந்த துணை நடிகர் விருதும் அதே படத்தில் நடத்த மெலிசாவுக்கு லியோ சிறந்த துணை நடிகைக்கான விருதும் கிடைத்தது. சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான விருதை டென்மார்க் நாட்டை சேர்ந்த “இன் ஏ பெட்டர் வோர்ல்டு” படம் பெற்றது.

0 comments :
Post a Comment