background img

புதிய வரவு

நாளை பிளஸ்டூ தேர்வு தொடக்கம்-28ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்

சென்னை : தமிழகத்திலும், புதுச்சேரியிலும், பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. மார்ச் 28ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இன்று சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின.

இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வை 7,80,631 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 3,87,102 பேர் ஆகும். மாணவர்களை விட 50 ஆயிரத்து 659 மாணவிகள் அதிகம் ஆவர்.

பிளஸ்டூ தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில், 1890 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுவையில் மொத்தம் 11,517 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்கள் போக தனித் தேர்வர்களின் எண்ணிக்கை 57,086 பேர் ஆவர்.

தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கும், பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். தேர்வு தொடங்கியதும் முதல் கால் மணி நேரம் வினாத்தாளைப் படித்துப் பார்க்க அவகாசம் தரப்படும்.

உடல் ஊனமுற்றோர், பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.

அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரைப் பிடிக்க பறக்கும் படையினரும் தயாராக உள்ளனர். தேர்வுகளில் பிட் அடித்தல், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோர் பிடிபட்டால் கடும் தண்டனை தரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கால அட்டவணை:

மார்ச் 2 - தமிழ் முதல் நாள்
மார்ச் 3 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 7 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 8 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 11 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்
மார்ச் 14 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து
மார்ச் 17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் அன்ட் டயட்டிக்ஸ்
மார்ச் 18 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் 21 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்
மார்ச் 23 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்
மார்ச் 25 - அனைத்து தொழில்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

28ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள்

பிளஸ்டூ தேர்வு முடிவடைந்ததும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் 28ம் தேதி தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 11ம்தேதி முடிவடையும். பத்தாம் வகுப்புத் தேர்வை 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 பேர் எழுதுகின்றனர்.

அதேபோல மெட்ரிகுலேசன் தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகள் மார்ச் 22-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந் தேதி முடிகிறது.

சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கின

இதற்கிடையே, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் பத்து மற்றும் பிளஸ்டூவுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின.

10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 25ம் தேதியும், பிளஸ்டூவுக்கான தேர்வுகள் ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடையும்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts