கொடைக்கானல் : தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், கட்சிக்காரர்களை, "குஷி'ப்படுத்த ஆளுங்கட்சியை சேர்ந்த நகராட்சி தலைவரின், திடீர், "பார்ட்டி'யால், கட்சிக்காரர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே, கொடைக்கானலில் தி.மு.க., சார்பில் தெருமுனைப் பிரசாரம், வாக்காளர்கள், "கவனிப்பு' ஒரு புறம் நடந்தாலும், கட்சிப் பிரமுகர்களையும் கவரும் விதமாக, நேற்று கொடைக்கானல் நகராட்சி பகுதியின், குடிநீர் ஆதாரமாக விளங்கும், அடர்ந்த வனப் பகுதியிலுள்ள, "ரிசர்வாயரில்' ஆளுங்கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள், கான்ட்ரக்டர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்ற, அசைவ விருந்து நடந்தது.
தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவர் முகமது இப்ராகிம் ஏற்பாட்டின் பேரில், சுடச்சுட மட்டன் பிரியாணி, சிக்கன், முட்டை என அனைத்து உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. முக்கிய வி.ஐ.பி., இந்த பகுதி அடங்கிய தொகுதியில் நிற்க உள்ளதால், மாவட்ட தி.மு.க., சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இப்பவே இப்படி என்றால் தேர்தல் வந்து, அந்த முக்கிய பிரமுகர் நின்றால் நாள் முழுவதும் கொண்டாட்டம் தான் என தொண்டர்கள் குஷிப்பட்டு கொண்டனர்.

0 comments :
Post a Comment