background img

புதிய வரவு

அழிந்தது கிறிஸ்ட்சர்ச் நகரம் பூகம்ப பலி 400; பலர் காணோம்

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை, 400 ஆக அதிகரித்துள்ளது; மேலும் பலர் காணாமல் போயிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நியூசிலாந்தில், 1936ம் ஆண்டுக்குப் பின் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் நகரம், பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.
இதையடுத்து, பிரதமர் ஜான் கீ, தேசிய அவசர நிலையை அறிவித்தார். கிறிஸ்ட்சர்ச் நகரில் தற்போது போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.பலர், இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர். இவர்களில் எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேர் தப்பிப் பிழைத்தனர் என்பது சரியாகத் தெரியவில்லை. எனினும், பலி எண்ணிக்கை 400 ஐத் தொட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரின் முக்கிய அடையாளமான, 150 ஆண்டுகள் பழைமையான கதீட்ரல் சர்ச் பெரிதும் சேதமடைந்து விட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதால், நகரின் பெரும்பான்மைப் பகுதிகள், இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டாலும், நேற்று முன்தினம் இரவு இடிபாடுகளுக்கிடையில் இருந்து, 30 பேர் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து இடிபாடுகள் மத்தியில் உயிருடன் இருப்பவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. குழந்தை பிழைத்த அதிசயம்: நிலநடுக்கம் ஏற்பட்ட போது, நகரின் முக்கியப் பகுதியில் இருந்த கேஷல் செயின்ட் வணிக வளாகத்தில் ஒரு பெண் தன் கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். நிலநடுக்கத்தின் போது, பீதியில் அவர் அங்கிருந்து வெளியே ஓடி வருவதற்குள் அந்த வளாகம் இடிந்து அவர் மீது விழுந்தது.
அதைப் பார்த்தவர்கள் அவரை மீட்கப் போராடினர். ஆனால், அவர் இறந்து விட்டார். அதிசயமாக அவரது கையில் இருந்த குழந்தை உயிருடன் தப்பி விட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts