background img

புதிய வரவு

பாக்., அபார வெற்றி! * அப்ரிதி சுழலில் சிக்கியது கென்யா

அம்பாந்தோட்டை: கென்யா அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 205 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய அப்ரிதி 5 விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்கில் சொதப்பிய கென்ய அணி, இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் "ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி பேட்டிங் தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்:
பாகிஸ்தான் அணிக்கு ஷெசாத், ஹபீஸ் துவக்கம் கொடுத்தனர். கென்யா அணியின் ஒடாயோ, ஒடியனோ இணைந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த, பாகிஸ்தான் வீரர்கள் ரன்சேர்க்க திணறினர். ஹபீஸ் 9 (20 பந்து), ஷெசாத் 1 (18 பந்து) இருவரும் அடுத்தடுத்து திரும்பினர். பாகிஸ்தான் அணி முதல் 9 ஓவரில் 24 ரன்கள் மட்டும் எடுத்தது.
கம்ரான் அபாரம்:
பின் கம்ரான் அக்மல், அனுபவ யூனிஸ் கான் இணைந்து அணியின் "ரன்ரேட்டை' உயர்த்தினர். நெகேமையா ஓவரில் யூனிஸ் கான் 3 பவுண்டரி அடித்தார். அவ்வப்போது பவுண்டரி அடித்த கம்ரான் அக்மல், தனது 9வது அரைசதம் அடித்து (55) அவுட்டானார். சிக்சர் அடித்து ரன்கணக்கை துவக்கிய மிஸ்பாவும், யூனிஸ் கானுக்கு "சூப்பர் கம்பெனி' கொடுத்தார். யூனிஸ் கான், சர்வதேச அரங்கில் 40 வது அரைசதம் (50) எடுத்து வெளியேறினார்.
உமர் அசத்தல்:
அடுத்து மிஸ்பாவுடன் இளம் உமர் அக்மல் இணைய, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் மிஸ்பா 65 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் ஒடியனோ ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி உட்பட நான்கு பவுண்டரிகள் விளாசினார். பவுண்டரி மழையாக பொழிந்த உமர் அக்மல் 71 (52 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்களுக்கு ஒபுயாவிடம் பிடிகொடுத்தார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அப்ரிதி (7) ஏமாற்றினார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது. அப்துல் ரசாக் (8), அப்துர் ரெஹ்மான் (5) அவுட்டாகாமல் இருந்தனர். கென்யா சார்பில் ஒடாயோ 3 விக்கெட் வீழ்த்தினார்.
சொதப்பல் பேட்டிங்:
இமாலய இலக்கை விரட்டிய கென்ய அணிக்கு இம்முறை மவுரிஸ், வாட்டர்ஸ் இணைந்து சுமாரான துவக்கம் தந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்த மவுரிஸ் (16), வாட்டர்ஸ் (17) இருவரும் அடுத்தடுத்து அவுட்டானர்.
தற்காப்பு ஆட்டம்:
பின் கேப்டன் டிகாலோ, ஒபுயா இருவரும் இலக்கை துரத்தி வெற்றி பெறுவதை விட, விக்கெட்டை காப்பாற்றும் வகையில் தற்காப்பு ஆட்டத்தில் இறங்கினர். இதனால் ரன்வேகம் மந்தமானது.
அப்ரிதி எழுச்சி:
பேட்டிங்கில் ஏமாற்றிய அப்ரிதி, பவுலிங்கில் கைகொடுத்தார். இவரது அபாரமான சுழலில் டிகாலோ (13), மிஸ்ரா (7), கமன்டே (2) சிக்கினர். ஒபுயா (47) அரைசத வாய்ப்பை பறித்த அப்ரிதி, சர்வதேச அரங்கில் நான்காவது முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பின் வரிசையில் ராகேப் படேல், ஒடாயோ, நிகோகே, நெகேமையா என நான்கு வீரர்களும் வரிசையாக "டக்' அவுட்டாகினர். கென்யா அணி 33.1 ஓவரில் 112 ரன்களுக்கு சுருண்டு, 205 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் சார்பில் அப்ரிதி 5, <உமர் குல் 2, ஹபீஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி வரும் 26ம் தேதி இலங்கையை சந்திக்கிறது.
---
அதிக உதிரிகள்
நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், கென்ய அணி 46 <<உதிரி ரன்களை வாரி வழங்கி, சர்வதேச அளவில் நான்காவது இடத்தை பெற்றது. முதல் மூன்று இடங்களில் ஸ்காட்லாந்து (59), இந்தியா (51), பாகிஸ்தான் (47) அணிகள் உள்ளன. இதற்குமுன் இந்தியாவுக்கு எதிரான 1999 உலக கோப்பை தொடரில் 44 உதிரிகளை கென்யா கொடுத்திருந்தது.
---
ஸ்கோர்போர்டு
பாகிஸ்தான்
ஹபீஸ்(கே)வாட்டர்ஸ்(ப)ஒடியனோ 9(20)
ஷெசாத்(கே)கமன்டே(ப)ஒடாயோ 1(18)
கம்ரான்(ஸ்டம்டு)மவுரிஸ்(ப)நிகோகே 55(67)
யூனிஸ் கான்-எல்.பி.டபிள்யு.,(ப)டிகாலோ 50(67)
மிஸ்பா(கே)ஒடியனோ(ப)கமன்டே 65(69)
<<உமர்(கே)ஒபுயா(ப)ஒடாயோ 71(52)
அப்ரிதி-எல்.பி.டபிள்யு.,(ப)ஒடாயோ 7(4)
ரஜாக்-அவுட் இல்லை- 8(6)
ரெஹ்மான்-அவுட் இல்லை- 5(3)
உதிரிகள் 46
மொத்தம் (50 ஓவரில் 7 விக்.,) 317
விக்கெட் வீழ்ச்சி: 1-11(முகமது ஹபீஸ்), 2-12(அகமது ஷெசாத்), 3-110(கம்ரான் அக்மல்), 4-155(யூனிஸ் கான்), 5-273(மிஸ்பா உல் ஹக்), 6-289(உமர் அக்மல்), 7-289(சாகித் அப்ரிதி).
பந்து வீச்சு: ஒடாயோ 7-2-41-3, ஒடியனோ 9-1-49-1, நெகேமையா 7-0-65-0, நிகோகே 10-0-46-1, கமன்டே 7-0-64-1, டிகாலோ 9-0-44-1, ஒபுயா 1-0-5-0.
கென்யா
மவுரிஸ்(கே)கம்ரான்(ப)குல் 16(37)
வாட்டர்ஸ்-ரன் அவுட்(<உமர் அக்மல்) 17(31)
ஒபுயா(கே)ஷெசாத்(ப)அப்ரிதி 47(58)
டிகாலோ(ப)அப்ரிதி 13(33)
மிஸ்ரா-எல்.பி.டபிள்யு.,(ப)அப்ரிதி 6(16)
ராகேப்(கே)உமர் அக்மல்(ப)ஹபீஸ் 0(6)
கமன்டே-எல்.பி.டபிள்யு.,(ப)அப்ரிதி 2(3)
ஒடாயோ-எல்.பி.டபிள்யு.,(ப)அப்ரிதி 0(8)
நெகேமையா-ரன் அவுட்(ப)யூனிஸ் 0(6)
நிகோகே(ப)உமர் குல் 0(1)
ஒடியனோ-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 11
மொத்தம் (33.1 ஓவரில் ஆல் அவுட்) 112
விக்கெட் வீழ்ச்சி: 1-37(வாட்டர்ஸ்), 2-43(மவுரிஸ்), 3-73(டிகாலோ), 4-79(மிஸ்ரா), 5-85(ராகேப் படேல்), 6-87(கமன்டே), 7-101(ஒடாயோ), 8-112(ஒபுயா), 9-112(நெகேமையா), 10-112(நிகோகே).
பந்து வீச்சு: சோயப் அக்தர் 5-1-10-0, அப்துல் ரஜாக் 5-1-23-0, உமர் குல் 4.1-0-12-2, அப்துர் ரெஹ்மான் 7-1-18-0, அப்ரிதி 8-3-16-5, ஹபிஸ் 4-1-26-1.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts