background img

புதிய வரவு

அரசுக்கு எதிராக ஈராக்கில் கலவரம்; 11 பேர் பலி

ஈராக்கில் அதிபர் சதாம் உசேன் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது. சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பிறகு அங்கு அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஓரளவு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. பிரதமர் நூரிஅல்-மலிகி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சியில் லஞ்சம், வேலையில்லாதிண்டாட்டம் போன்றவை அதிகரித்து விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

மொத்தத்தில் அரசு நிர்வாகம் சீரழிந்து விட்டதாக குற்றம் சாட்டி நேற்று ஈராக்கில் எதிர்ப்பு தினம் கடை பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாக்தாத், மொசூல் உள்ளிட்ட நகரங்களில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. அப்போது அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒரு கட்டத்தில் பேரணியில் வன்முறை வெடித்ததால் அது கலவரமாக மாறியது.

பாக்தாத்தில் பேரணியாக புறப்பட்ட மக்கள் விடுதலை சதுக்கத்தை அடைந்தனர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்ற மக்கள் நாங்கள் மிருகங்கள் அல்ல. மனிதர்கள். எங்களுக்கு நல்ல வாழ்க்கை வேண்டும் என்று கோஷமிட்டனர். கைகளில் கொடிகளை ஏந்தியபடி சென்றனர். அங்கு பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.

பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் களில் பறந்தபடி ராணுவத்தினர் கண்காணித்தனர். ராணுவ டிரக்குகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஹவிஜா நகரில் நகர சபை அலுவலகத்துக்குள் நுழைய மக்கள் முயன்றனர். அவர்களை தடுக்க ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் பலியானார்கள்.

மொசூல் நகரில் மாகாண கவுன்சில் அலுவலகம் எதிரே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இது போன்ற சம்பவங்களில் 11 பேர் பலியானார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts