ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியில் நேற்று இரவு 9.10 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
சிறிது நேரம் கழித்து வீடுகளுக்கு திரும்பினர். இதற்கிடையே அங்கு 3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிகர் மாவட்டத்தில் நீம்கா தானா என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.

0 comments :
Post a Comment