background img

புதிய வரவு

டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்:உள்துறை அமைச்சர் பெருமிதம்

புதுடில்லி:"இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களை விட, தலைநகர் டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கேள்வி நேரத்தின் போது, பதிலளித்து பேசியதாவது:தலைநகர் டில்லியில் நடக்கும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, சட்டம் ஒழுங்கு நிலை கட்டுக்குள் உள்ளது.
உலக அளவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, 1 லட்சம் மக்களின் அடிப்படையில், டில்லியில், 2001ல், 392.66 ஆக இருந்த குற்றச் செயல்களின் குறியீட்டு எண், 2010ல், 281.34 ஆக குறைந்துள்ளது.எனினும், அரசு அளித்துள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2009ல், 425 ஆக இருந்த பாலியல் வன்முறை வழக்குகள், 2010ல், 458 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும், 17 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களைக் காட்டிலும், தலைநகர் டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்.
இங்கு, பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதிக எண்ணிக்கையில் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. போலீஸ் வாகனங்கள், ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக இடங்களில் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் இணைந்து, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts