எண்ணை உற்பத்தியில் உலக அளவில் ஈராக் 3-வது இடம் வகிக்கிறது. எனவே இங்கு அதிக இடங்களில் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. சலாகுதீன் மாகாணத்தில் உள்ள பெய்கி என்ற இடத்தில் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதர்கள் சிலர் அங்கு புகுந்தனர். அவர்களை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்தனர். உடனே அவர்கள் காவலர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவர் உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
பின்னர், அந்த சுத்திகரிப்பு ஆலை மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதில், சுத்திகரிப்பு ஆலை தகர்ந்து தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அங்கு ஆலை மூடப்பட்டது. மறு சீரமைப்பு நடந்து விரைவில் அந்த ஆலை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு தீ வைக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் பேரல் எண்ணை உற்பத்தி செய்யப்படுகிறது.

0 comments :
Post a Comment