background img

புதிய வரவு

ஐதராபாத் கீமா

தேவையான பொருட்கள்

கொத்துக்கறி - 1/2 கிலோ
பச்சைபட்டாணி - 1/4 கிலோ
வெங்காயம்,தக்காளி - 200 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பற்கள்
பச்சைமிளகாய் - 4
மிளகாய்த்தூள், தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை லவங்கம், ஏலக்காய் - தலா 2
உருளைக் கிழங்கு - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 குழிக்கரண்டி

செய்முறை

கொத்துக்கறியை (கீமா) சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும்.இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும், வெங்காயம், தக்காளி, மிளகாய் நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம்,ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க்கவும்.பட்டாணி சேர்த்து வதக்கி சிறிது நீர் சேர்க்கவும்.இப்போது கீமாவைச் சேர்த்து தொடர்ந்து மஞ்சள்தூள், தனியாத்தூள்,மிளகாய்த்தூள்,தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வேக வைக்கவும்.தேவையெனில் உருளைக்கிழங்கையும் துண்டாக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.கீமா,பட்டாணி, மசாலா கலவை சேர்ந்து நன்கு வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி விடவும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts