திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரில் இருந்த பழமையான ஆயிரங்கால் மண்டபம் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதற்கு சில ஐயர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இடிக்கப்பட்ட அதே இடத்தில் புதிய மண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.இதையடுத்து திருப்பதி கோவில் எதிரில் புதிய மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதில் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி கோவில் மணி மண்டபத்தில் 100 தூண்கள் அமைக்கப்படுகிறது. இக்கட்டிடம் முழுக்க முழுக்க ஆகம விதிகள்படி கட்ட திட்டமிட்டுள்ளோம். இப்பணியை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இம்மண்டபம் கட்ட 2007-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
அப்போது இதற்கு ரூ.10.70 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் தற்போது கட்டுமான பொருட்கள், விலை அதிகரித்ததால் ரூ.17 கோடி வரை செலவாகும். எவ்வளவு செலவானாலும் மணி மண்டபத்தை 2 ஆண்டுகளில் கட்டி முடித்தே தீருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :
Post a Comment