background img

புதிய வரவு

எல்.ஐ.சி. வினாத்தாள் அவுட்: வினாத்தாளை ரூ.5 லட்சத்துக்கு விற்ற 11 பேர் கைது

எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரிக்கான எழுத்து தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்தலை மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதினார்கள். 160 மையங்களில் தேர்வு நடந்தது.

டெல்லியில் 16 மையங்களில் தேர்வு நடந்தது. அங்கு ஒரு மையத்துக்கு தேர்வு எழுத வந்தவர்களிடம் முன்கூட்டியே வினாத்தாள் இருந்தது. உடனே இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் வினாத்தாள் அவுட் ஆனது தெரிய வந்தது. இதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். அவர்கள் விசாரணை நடத்தியதில் நாடு முழுவதுமே வினாத்தாள் அவுட் ஆகி இருந்தது தெரிந்தது.

டெல்லி, மராட்டியம், பஞ்சாப், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் வினாத்தாள் அவுட் ஆகி இருந்தன. இது தொடர்பாக டெல்லியைச்சேர்ந்த பவன்குமார் (வயது 33). என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி டெல்லியில் 5 பேரும் ஆந்திராவில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் இதில் தொடர்புடையவர்களை பிடிக்க தீவிர வேட்டை நடந்து வருகிறது. ஒரு வினாத்தாளுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணம் வைத்து விற்று உள்ளனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருப்பதாக தெரிகிறது. பெரிய கும்பலே இந்த சதியில் ஈடுபட்டு உள்ளனர். போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

வினாத்தாள் அவுட் ஆகிவிட்டதால் நேற்று நடந்த தேர்வு ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி எல்.ஐ.சி. அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்வு ரத்தாகுமா? இல்லையா என்பது குறித்து தேர்வு அமைப்பு கூடி முடிவு செய்வோம் என்றனர்.

இந்த மோசடியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள். தேர்வை எல்.ஐ.சி. நிறுவனம் நேரடியாக நடத்தவில்லை. தேர்வை நடத்தும் பொறுப்பை “எட்சில்” என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தனர். அந்த நிறுவனத்தில்தான் ஏதோ தவறு நடந்து இருப்பதாக கருதப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts