background img

புதிய வரவு

ராஜஸ்தான் அரசு ஆஸ்பத்திரியில் கெட்டுப்போன குளுக்கோஸ் ஏற்றியதால் 12 கர்ப்பிணி பெண்கள் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது.இங்கு பிரசவத்துக்காக தனிப்பிரிவு செயல்படுகிறது. இதில் பலவீனமான கர்ப்பிணி பெண்களுக்கு சக்தியை அதிகப்படுத்த குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

வேறு ஏதோ காரணத்தால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கருதி சிகிச்சை அளித்தனர்.ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் 12 பேர் பலியானார்கள். 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதலில் அவர்கள் ஏன் உயிர் இழந்தார்கள் என்பது தெரியாமல் இருந்தது. பின்னர் சோதனை நடத்தியதில் அவர்களுக்கு ஏற்றப்பட்ட குளுக்கோசில் கோளாறு இருப்பது தெரிந்தது.அவர்களுக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் கெட்டு போய் இருந்ததே உயிர் இழப்புக்கு காரணம் என்பதை கண்டுபிடித்தனர்.

இந்த ஆஸ்பத்திரிக்கு இந்தூரைச் சேர்ந்த பேரன்டன் சர்ஜிக்கல் என்ற மருத்துவ நிறுவனம் 5 ஆயிரம் பாட்டில் குளுக்கோஸ்களை சப்ளை செய்து இருந்தது. அதில்தான் கெட்டுப்போன குளுக்கோஸ்களும் இருந்துள்ளன.
இதையடுத்து மருந்து நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மாநிலம் முழுவதும் சப்ளை செய்த அனைத்து குளுக்கோஸ் பாட்டில்களையும் பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரிக்க 6 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டு உள்ளது

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts