background img

புதிய வரவு

தெண்டுல்கர் வீடு கட்ட அனுமதி மறுப்பதா? ராஜ்தாக்கரே கண்டனம்

தெண்டுல்கர் மும்பையில் புதிதாக 4 மாடி கொண்ட வீடு கட்டி வருகிறார். இதற்காக நகர வடிவமைப்பு துறையிடம் அனுமதி பெற்று இருந்தார். இப்போது அதன் ஒரு தளத்தில் உடற் பயிற்சிக்கூடம் அமைக்க வசதியாக கட்டிடத்தில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்திருந்தார்.

இதற்காக அவர் நகர வடிவமைப்பு துறையிடம் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதற்கு மராட்டிய நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

தெண்டுல்கர் வீடு கட்டுவதில் சின்னமாற்றம் செய்ய சட்ட ரீதியாக அனுமதி கேட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு மராட்டிய அரசு அனுமதி அளிக்காதது வெட்ககரமானது. உலக அளவில் தெரிந்த ஒரு வீரரை இப்படி அவமதித்து இருக்கின்றனர்.

வெளி மாநிலங்களை சேர்ந்த பலர் மும்பையில் குடியேறி சட்ட விரோதமாக குடிசை போட்டு தங்கி உள்ளனர். இதை அரசு சட்ட ரீதியாக்கி வருகிறது. அப்படி இருக்க சட்ட ரீதியாக முறைப்படி விண்ணப்பித்த தெண்டுல்கருக்கு மட்டும் மறுப்பு தெரிவிப்பது ஏன்? மும்பையில் எத்தனையோ கட்டிடங்கள் சட்ட விரோதமாக கட்டி உள்ளனர். அதை முதல்-மந்திரி கவனத்துக்கு கொண்டுவர நான் தயாராக இருக்கிறேன். அவற்றை எல்லாம் முதல்-மந்திரி இடிக்க உத்தர விடுவாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts