background img

புதிய வரவு

மசால் தோசை

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 2 கப்,
பச்சரிசி - 2 கப்,
உளுத்தம்பருப்பு - முக்கால் கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
ஜவ்வரிசி - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய், நெய், உருளைக்கிழங்கு மசாலா - தேவையான அளவு

செய்முறை

அரிசி வகை, பருப்பு,வெந்தயம்,ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.பின்னர் நைஸாக அரைத்து,உப்பு போட்டுக் கரைத்து, 30 மணி நேரம்
புளிக்கவைக்கவும். மாவு பொங்கிவரும் பட்சத்தில் தோசை வார்க்கலாம்.தோசைக்கல்லில் நடுவில் மாவை ஊற்றி, அடி தட்டையாக இருக்கும் கரண்டியில் நிதானமாக வட்டமாக தேய்த்துக் கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும்.
பிறகு உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து மடித்து கொடுக்கலாம்.இந்த தோசைக்கு திருப்பிப் போடவேண்டிய அவசியமில்லை.நெய்யும் எண்ணெயும் கலந்து வைத்துக்கொண்டு தோசை வார்க்க வேண்டும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts