background img

புதிய வரவு

விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டி? அ.தி.மு.க. கூட்டணியில் “சீட்” கேட்க முடிவு

விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. நடிகர் விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்கள் நலப்பணிகள் நடந்து வருகின்றன. நாகையில் மீனவர்களுக்கு எதிராக நடந்த விஜய் கண்டன கூட்டத்தையும் இந்த மக்கள் இயக்கம்தான் ஏற்பாடு செய்தது. அடுத்தக்கட்டமாக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் இயக்கம் நேரடியாக ஈடுபடுகிறது.

இந்த இயக்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் அவர்களை இறக்க பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இரண்டு முறை சந்தித்தார். அப்போது இதுபற்றி அவர்கள் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எஸ்.ஏ.சந்திரசேகரன் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது ரசிகர்களுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது கொடுத்தால் அவர்களுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும்போது அந்த ரசிகர்களுக்காக அவர்களுடைய வெற்றிகளுக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும் என்று தெளிவுபடுத்தினார்.

இதன்மூலம் ரசிகர்கள் போட்டியிட தொகுதி ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தொகுதிகளில் விஜய்க்கு உள்ள செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு போன்றவை குறித்து கருத்து கேட்கப்பட்டன.

தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த பற்றிய விவரங்களை அவர் சேகரித்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவை விஜய் விரைவில் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. அப்போது கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்றவை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விஜய்யின் மக்கள் இயக்கம் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் கண்டுள்ளன. அவற்றை அ.தி.மு.க.விடம் கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts