ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மையும் கூட இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மிகவும் `பிசி'யாக இருப்பதற்கு, அதாவது `ஜெட்' வேக வாழ்க்கைமுறைக்குப் பலியாவது தூக்கம்தான்.
நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்' என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம்.
``இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராகப் பராமரிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டிருக்கிறது. போதுமான தூக்கமின்மை, `உயிர்க் கடிகாரத்தை'ப் பாதிக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது'' என்று இதய மருத்துவர் பகவத் கூறுகிறார்.
உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :
Post a Comment