background img

புதிய வரவு

கத்திரிக்காய் தொக்கு

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் - 1 /2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 8
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு -8 பல்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 /4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் நறுக்கிய கத்திரிக்காய்,வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 1 விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.ஒரு விசில் வந்த பிறகு குக்கரை குறைந்த தீயிலேயே சிறிது நேரம் வைத்து பின் அடுப்பை அணைக்கவும்.மத்து பயன்படுத்தி கத்திரிக்காயை லேசாக மசித்துக் கொள்ளவும்.கடையில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம் சேர்த்து தாளித்து பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின் மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை இதனுடன் சேர்த்து,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை, கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts