முதல்வர் கருணாநிதியின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படும் வரலாற்றுப் புதினம் பொன்னர் சங்கர். இந்தக் கதையை நடிகரும் இயக்குநருமான தியாகராஜன், தன் மகன் பிரசாந்தை வைத்து தயாரித்து இயக்குவதாக அறிவித்து வேலைகளை ஆரம்பித்தார்.
இடையில் இந்தப் படத்தின் தயாரிப்பை இளைஞன் படத்தை எடுத்த மார்ட்டின் ஏற்றதாகவும், தியாகராஜனுக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதித்துள்ளதாகவும் செய்துகள் வெளியாகின.
இப்போது தயாரிப்புப் பொறுப்பு மீண்டும் தியாகராஜனிடமே வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள பத்திரிகைக் குறிப்பில், பொன்னர் சங்கர் படத்தை தியாகராஜன் பிரமாண்டமாக தயாரித்து இயக்குவாதகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
படத்தின் பெரும்பான்மையான பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம். தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், என நாட்டின் பல பகுதியிலிருந்தும் கிராமியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளார்களாம்.
கருணாநிதி கதை வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வர் என இரு உலக அழகிகள் நடிக்கிறார்கள். பிரசாந்த் தங்கையாக சினேகாவும், தலையூர் காளியண்ணன் என்ற முக்கிய வேடத்தில் மத்திய அமைச்சர் நெப்போலியன் நடிக்கிறார்.
மேலும் ராஜ்கிரண், வடிவேலு, ஜெயராம், குஷ்பூ, நாசர், விஜயகுமார் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு போர்க்களக் காட்சிக்காக 5000 துணை நடிகர்கள் பங்கேற்றனர்.
தமிழில் இதுவரை வந்த சரித்திரப் படங்களில் மிகப் பிரமாண்ட படம் என்ற அந்தஸ்தை பொன்னர் சங்கர் பெறும் என்கிறார் தியாகராஜன்.

0 comments :
Post a Comment