background img

புதிய வரவு

நியூசிலாந்தில் கடும் பூகம்பம்:65 பேர் பலி: கட்டடங்கள் சேதம்

மெல்போர்ன்: நியூசிலாந்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் , தொன்மையான கட்டடங்களுக்குப் புகழ்பெற்ற கிறிஸ்ட் சர்ச் நகரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி 65 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.ஆஸ்திரேலியா அருகில் உள்ள நியூசிலாந்து நாட்டின் தென்பகுதியில் நேற்று நண்பகலில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தில், தென்பகுதியின் முக்கிய நகரமான கிறிஸ்ட் சர்ச் நகரம் பெரிதும் சேதம் அடைந்தது.
அந்நகரில் உள்ள பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. தொலைபேசி மற்றும் மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டது. கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கிருந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தண்ணீர்க் குழாய்கள் உடைந்ததால் பல தெருக்கள் வெள்ளத்தில் மிதந்தன.இந்நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி 65 பேர் பலியாகியுள்ளனர். பலர் காணாமல் போய்விட்டனர். எனினும் இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கிறிஸ்ட் சர்ச் மேயர் கூறுகையில், "பல கட்டடங்கள் தரை மட்டமானதால், அதில்சிக்கி இறந்தவர்களை கண்டறிய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்,தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்நகரில் 7.1 புள்ளியளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின், மிக அதிகளவில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts