background img

புதிய வரவு

எகிப்தில் உடனடி ஆட்சி மாற்றம் வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல்

எகிப்தில் உடனடி ஆட்சி மாற்றம் வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக்கோரி, கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் ந்டத்தி வருகிறார்கள்.

முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முயன்று வருகிறது.

அதன் காரணமாக அதிபர் ஒபாமாவின் தூதுவர் ஒருவர் எகிப்து அனுப்பப்பட்டுள்ளார்.

எகிப்து அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்த போதிலும்,முபாரக் பதவில் நீடிப்பதை அந்நாட்டு மக்கள் விரும்பாத நிலையில் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும்,எகிப்தில் அமைதி திரும்பவும், ஜனநாயக அரசு அமையவும் உடனடியாக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் ஒபாமா விரும்புவதாக அத்தூதர் மூலம் எகிப்து அதிபர் முபாராக்கிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts