background img

புதிய வரவு

ட்ரா‌ட் சத‌ம்: இ‌ங்‌கிலா‌ந்து 333 ரன் கு‌வி‌ப்பு

சி‌ட்‌னி‌யி‌ல் நட‌ந்து வரு‌‌ம் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி‌க்கு எ‌திரான 6வது ஒரு நா‌ள் போ‌ட்டி‌யி‌ல் ‌ட்ரா‌ட்டி‌ன் அபார சத‌த்தா‌ல் இ‌ங்‌கிலா‌ந்து 333 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து‌ள்ளது.

பூவா தலையா வெ‌ன்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்து‌ள்ளது.

அதிகபட்சமாக ஜோன‌த்தா‌ன் ‌ட்ரா‌ட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்தார்.

ஸ்டாரஸ் 63 ரன்களும், இயான் பெல் 45 ரன்களும் எடுத்தனர்.

334 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌‌ல் வெ‌‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குட‌ன் ஆஸ்‌ட்ரேலிய அணி ‌விளையாடி வரு‌கிறது.

தொட‌‌க்க ‌வீர‌ர்க‌ள் வா‌ட்ச‌ன் 36 ர‌ன்‌‌னி‌லு‌ம், ஹா‌ட்டி‌ன் 17 ர‌ன்‌னிலு‌ம் ‌விளையாடி கொ‌ண்டிரு‌க்‌‌கி‌ன்றன‌ர். த‌ற்போது ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி ‌வி‌க்கெ‌‌ட் இழ‌ப்‌பி‌ன்‌‌றி 7 ஓவ‌ரி‌ல் 59 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து‌ள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts