2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் தாமதமான நடவடிக்கை என்று பா.ஜனதா கூறியுள்ளது.
டெல்லியில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, ராசா கைது செய்யபட்டதை தமது கட்சி வரவேற்றபோதிலும், இது மிகச் சிறிய மற்றும் தாமதமான நடவடிக்கை என்றும்,இந்த ஊழலில் தொடர்புடைய மற்றவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ராசா மட்டுமே 1.76 லட்சம் கோடி ரூபாயை முழுங்கிவிட்டார் என்று கூறுவது அநியாயமானது. அதில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? அதனை தெரிந்துகொள்ள பா.ஜனதா விரும்புகிறது.
ராசா கைது ஒரு தொடக்கம் மட்டுமே.ராசா கைது செய்யப்பட்டதற்காக மத்திய அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்து விடாதீர்கள்.இன்னும் பல கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டியதுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

0 comments :
Post a Comment