புது தில்லி, பிப். 2: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவை கைது செய்தது மட்டும் போதாது; அவரை மேலிருந்து இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டுமென்று பாஜக தலைவர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. இதில் ராசாவுக்கு மட்டுமல்லாமல் ஆட்சி, அதிகாரத்தில் மேல்மட்டத்தில் உள்ள வேறு பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் ராசாவை பின்னால் இருந்து இயக்கியுள்ளனர். அவர்கள் எல்லாம் யார் என்பதைக் கண்டறிந்து அனைவரையும் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும்.
÷தங்களிடம் உள்ள சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று எங்கள் கூட்டணித் தலைவர்கள், முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் சொத்துக் கணக்கை வெளியிடுமாறு உத்தரவிடமுடியமா? முதலில் சோனியா காந்திதான் தனது உண்மையான சொத்துக் கணக்கை வெளியிடத் தயாரா?
÷ஆளும்கூட்டணியில் உள்ள பலரும் வெளிநாட்டில் கறுப்புப் பணத்தை வைத்துள்ளனர் என்பது கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் பட்டியலை வெளியிடும் விஷயத்தில் அவர்கள் காட்டும் தயக்கத்தில் இருந்தே தெரியவருகிறது என்றார் கட்கரி.

0 comments :
Post a Comment