background img

புதிய வரவு

உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தும் வேலையின்மை, வறுமை!

வேலை இல்லா திண்டாட்டம், வறுமை மற்றும் சமூக அநீதி ஆகியவைதான் உலக நாடுகளின் இன்றைய முக்கிய கவலைகளாக உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வட மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள 24 நாடுகளில், 18,676 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களது நாடு தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்று தாங்கள் கருதுவதாகவே கூறியுள்ளனர்.

மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே தங்களது நாடு சென்றுகொண்டிருக்கும் பாதை குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்தியா, இந்தோனேஷியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை தவிர மற்ற நாடுகளில், ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளை காட்டிலும் வேலை இல்லா திண்டாட்டம்தான் மிகப்பெரிய கவலையாக உள்ளதும், பிரேசில் மற்றும் கனடாவை தவிர்த்து அனைத்து நாடுகளிலும் சுகாதாரம் முக்கிய பிரச்சனையாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

" 2010 லிருந்தே உலக நாடுகளின் கவலைகள் மாறவில்லை" என்று கூறுகிறார பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'இப்ஸாஸ்'இன் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஜான் ரைட்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts