background img

புதிய வரவு

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் தேர்தல் பிரசாரம்

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக
 
 நடிகர், நடிகைகள்
 
 தேர்தல் பிரசாரம்சட்டமன்ற தேர்தல் களை கட்டுகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் முனைப்பாகி உள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. இடையே இருமுனைப் போட்டி உறுதியாகி உள்ளது. இவ்விரு கட்சிகளோடு பிற கட்சிகள் கூட்டு வைக்க தயாராகின்றன.இன்னொரு புறம் பிரசார வியூகம் வகுத்தலும் மும்முரமாய் நடக்கிறது.


கூட்டங்களை திரட்ட நடிகர், நடிகைகள் பிரசாரத்தில் இறக்கி விடப்படுகின்றனர். இதற்காக பிரபல நடிகர், நடிகைகளுக்கு கட்சிகள் வலைவிரிக்கின்றன. ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க.வில் நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். அவர்கள் பிரசார சுற்றுப்பயணத்துக்கு தயார் ஆகிறார்கள்.


தி.மு.க.வுக்கு ஆதரவாக நெப்போலியன், நடிகை குஷ்பு, வாகை சந்திரசேகர், பாக்யராஜ் உள்ளிட்டோர் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்ய உள்ளனர். நெப்போலியன் தி.மு.க. வில் மத்திய மந்திரியாக உள்ளார். இவர் மேடைகளில் பாட்டுப்பாடி உரையாற்றுவது கூட்டத்தினரை கவர்கிறதாம்.


குஷ்புவுக்கு இது முதல் தேர்தல் பிரசாரம் திராவிட இயக்க வரலாற்று புத்தகங்கள் படித்தும் தற்போதைய அரசியல் நிலவரங்களை ஆய்வு செய்தும் கூட்டங்களில் பேச தன்னை தயார்படுத்திக் கொண்டு உள்ளார்.


அ.தி.மு.க.வுக்காக ராதாரவி, ராமராஜன், ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், வில்லன் நடிகர் பொன்னம்பலம், சூர்யகாந்த், திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகான், நாஞ்சில் பி.சி. அன்பழகன், நடிகை சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் பிரசாரத்தில் குதிக்கின்றனர்.பொன்னம்பலம் இரு தினங்களுக்கு முன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.


கடந்த தேர்தலில் நடிகைகள் சிம்ரன், விந்தியா, கோவைசரளா, நடிகர் செந்தில் போன்றோர் அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தனர். தற்போது அவர்கள் ஒதுங்கியுள்ளனர். இந்த தேர்தலிலும் அவர்களை பிரசாரத்தில் இறக்க அ.தி.மு.க. தரப்பில் முயற்சிகள் நடக்கிறது.


நடிகர், நடிகைகளுக்காக தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை இரு கட்சிகளும் தயார் செய்து வருகின்றனர். இவர்களுக்காக விசேஷ வேன்களும் தயார் ஆகிறது. பிரசாரத்துக்கு வசதியாக இரு மாதங்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்ய இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts