background img

புதிய வரவு

மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: எகிப்து அதிபர் முபாரக் அறிவிப்பு

மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் அறிவித்துள்ளார்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக்கோரி, கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் ந்டத்தி வருகிறார்கள்.

போராட்டத்தின்போது வெடித்த பயங்கர கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது.

அதிபருக்கு எதிராக நேற்று தலைநகர் கெய்ரோவின் மையப்பகுதியில் உள்ள தரிர் சதுக்கத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இராணுவமும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அறிவித்துவிட்டது.

நிலைமை இந்த அளவிற்கு தீவிரமடைந்துள்ள போதிலும்,முபாரக் இன்னமும் பதவி விலக மறுத்துவருகிறார்.

தமது பதவிக்காலம் முடிவடையும் இந்த ஆண்டு செப்டம்பர் வரை பதவியில் தொடர்ந்து நீடிக்கபோவதாக அறிவித்துள்ளார்.அதே சமயம் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் தாம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஆனால் முபாரக்கின் இந்த அறிவிப்பு ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts