background img

புதிய வரவு

நாசிக்: பயிற்சி ஹெலிகாப்டர் விபத்தில் 2 விமானிகள் பலி

நாசிக்கில் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பலியாயினர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் விமானம் ஒன்று,கோவா நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானம், குடியிருப்பு பகுதி ஒன்றில் ஆளில்லாத வீட்டின் மீது விழுந்து நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர்.

விமானம் நொறுங்கி விழுந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால், வேறு யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts