background img

புதிய வரவு

இலங்கைக்கு ஐசிஎஃப் இரயில் பெட்டிகள்!

சென்னை வில்லிவாக்கத்திலுள்ள இருப்புப் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தொடர் வண்டி பயணிகள் பெட்டிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் தொடர் வண்டிப் பாதைகளில் இயக்கப்படவுள்ள இன்சினையும், தொடர் வண்டிகளுக்கான 45 பயணிகள் பெட்டிகளைத் தயாரித்துத் தர இந்தியாவிற்கு சிறலங்க அரசிற்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, சென்னை இருப்புப் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட 12 பயணிகள் பெட்டிகள் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வண்ணமயமான கண்கவர் பூச்சுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பயணிகள் பெட்டியும் 30 முதல் 35 டன் எடை கொண்டவை. எஞ்சின் 75 டன் எடை கொண்டது.
நேற்று முன் தினம் 3 பயணிகள் பெட்டிகள் 100 அடி நீளம் கொண்ட மிகப் பெரிய டிரெய்லர்களில் ஏற்றப்பட்டு சென்னை துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டன. இந்த டிரெய்லர்களின் நீளம் மிக அதிகமானது என்பதலால், சாலைகளில் நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்க இரவு நேரத்தில் கொண்டு செல்லப்படுகிறது.
சாதாரண பெட்டிகள், குளிர் வசதி செய்யப்பட்ட பெட்டிகள் என அனைத்தும் இந்த 45 பெட்டிகளில் அடக்கமாகும். பெட்டிகள் அனைத்தும் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த பின் அவைகள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இலங்கையின் தென் பகுதியில் உள்ள மாத்தளையில் இருந்து கொழும்புவி்ற்கு இரயில் பாதை அமைக்க 800 மில்லியன் டாலர்களை - மென் கடனாக கொடுத்து உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts