background img

புதிய வரவு

இந்திய மாணவர்கள் நலனைக் காப்போம்: கிருஷ்ணா உறுதி

கலி்ஃபோர்னியாவிலுள்ள டிரை-வாலி பல்கலைக்கு மோசடி விசா பெற்று படிக்கச் சென்று, தற்போது சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் காப்போம் என்று அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் அமெரிக்கா செல்லும் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், அமெரிக்கா அரசு அதிகாரிகளிடம் இப்பிரச்சனையை எழுப்புவார் என்று கூறியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே இராஜதந்திர கூட்டாண்மை மேம்படுத்த வரும் ஏப்ரல் மாதம் வருகை தரவுள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பயணம் தொடர்பாக இறுதி செய்ய அமெரிக்கா செல்லும் நிருபமா, இந்திய மாணவர்கள் பிரச்சனையையும் கையாள்வார் என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.

இதற்கிடையே, சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு டிராக்கரை பொறுத்தியுள்ளதை நீக்க வேண்டும் என்று இந்தியத் தூதரம் அமெரிக்க சுங்க மற்றும் குடியுரிமைத் துறையிடன் கோரியுள்ளது. தங்களால் சட்டத்திற்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதனை செய்வோம் என்று அந்தத் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts