background img

புதிய வரவு

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பில்லை: காங்கிரஸ்

புது தில்லி, பிப். 2: ஆ.ராசா கைது செய்யப்பட்டுள்ளதால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, சி.பி.ஐ.யால் கைது செய்யபட்ட பின் தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களை சிங்வி சந்தித்தார்.
அப்போது, மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டிருப்பது பிரதமர் மன்மோகன் சிங் மீதான நம்பிக்கையை குலைக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "உங்களைத் தவிர வேறு யாரும் இப்படி நினைக்கவில்லை. இந்த கைது நடவடிக்கையால் பிரதமர் மீதும், மத்திய அரசு மீதும் உள்ள நம்பிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக மத்திய அமைச்சரவையில் இருந்த ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பது அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்கவே செய்யும். மற்ற அரசுகள் போல் இல்லாமல் இப்போதைய ஆட்சியில் எவ்வித குறுக்கீடும் இன்றி, சட்டம் தன் கடமையைச் செய்து வருகிறது' என்றார்.
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒருவர் பல கோடி ரூபாய் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் கைதாகி இருப்பதற்கு ஒட்டுமொத்த அமைச்சரவையும், பிரதமரும்தானே பொறுப்பேற்க வேண்டும் என்ற கேள்விக்கு, இது பொருளற்ற, பொருத்தமற்ற கேள்வி என்று சிங்வி பதில் அளித்தார்.
ஆ.ராசா மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கைது செய்ய வேண்டுமென்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கருத்து குறித்துப் பேசிய அவர், ஒருவர் கூறிவிட்டார் என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. ஆ.ராசா கைது, ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவாண் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பது போன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சி மீதும், காங்கிரஸ் அரசின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts