background img

புதிய வரவு

ராசாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சிபிஐ அலுவலகத்திற்கு நேற்று நான்காவது முறையாக வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் ராசா.

விசாரணையின்போது பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்ததால்,அவரை மாலை 3 மணியளவில் கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் அவருடன் பணியாற்றிய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, ராசா உள்ளிட்ட மூன்று பேரையும் 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts