background img

புதிய வரவு

அதிமுக கூட்டணியில் தென்காசியில் சரத்குமார் போட்டி?

வரும் சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதியில் நடிகர் சரத்குமார் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

அதி்முகவுடன் கூட்டணி்க்கு காய் நகர்த்தி வரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் முதலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறி வந்தார். ஆலங்குளம் தொகுதியில் சமகவிற்கு உள்ள கணிசமான ஆதரவும், நாடார் சமுதாய ஓட்டுகளும் கை கொடுக்கும் என்று அவர் நம்பினார்.

ஆனால் ஆலங்குளம் தொகுதியில் திமுக-காங்கிரஸ் கட்சிகள் பலமிக்கதாக இருப்பதாகவும், நாடார் சமுதாய ஓட்டுக்கள் முழுமையாக கிடைக்குமா என்பது சந்தேகமே எனவும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் ஆலங்குளத்தில் நடக்க இருந்த சமக கட்சி மாநாட்டை தென்காசிக்கு மாற்றினார். தென்காசி தொகுதியில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாகவும், மேலும் இந்திய கம்யூனிஸ்ட், நடிகர் கார்த்திக் கட்சி, புதிய தமிழகம் கூட்டணி வெற்றிக்கு வழி வகுக்கும் எனவும் சரத்குமார் கணக்கு போடுவதாகத் தெரிகிறது.

எனவே ஆலங்குளத்தை விட தென்காசி தான் தனக்கு பாதுகாப்பான தொகுதி என தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் சரத்குமாரை கூட்டணியில் சேர்ப்பதோடு அவருக்கு தென்காசி மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளை ஒதுக்கவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் சரத்குமாரை மாநிலம் முழுவதும் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய களமிறக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.

நடிகர் கார்த்திக் மூலம் தேவர் சமூக வாக்குகளை வளைத்துவிட முடியும் என்று கருதும் ஜெயலலிதா, சரத்குமார் மூலம் நாடார் சமூகத்தினரின் வாக்குளை கவர முடியும் என்று நினைக்கிறார்.

அதே போல கொங்குநாடு முன்னேற்ற கழகத்தையும் அதிமுகவுக்கு இழுக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts