background img

புதிய வரவு

இந்த ஆண்டு திருப்பதி கோவில் உண்டியலில் 1175 கிலோ தங்கம்; காணிக்கை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் பணம் மற்றும் தங்க நகைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.கடந்த சில மாதங்களாக உண்டியல் வருமானம் தினமும் ரூ.1 கோடியே தாண்டி வருகிறது.

இதனால் தேவஸ்தானத்திற்கு கணிசமான அளவுக்கு வருமானம் உயர்ந்துள்ளது. இதேபோல் இந்த ஆண்டு உண்டியல் மூலம் கிடைக்கும் தங்க காணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய மொத்த தங்கத்தின் எடை 1175 கிலோ. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 100 கிலோ தங்கம் கூடுதலாக கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு கிடைத்த தங்கத்தை தேவஸ்தான அதிகாரிகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் டெபாசிட் செய்தனர். இதற்கு வங்கி 1.61 சதவீத வட்டி தர ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டை விட 0.60 சதவீத வட்டியை வங்கி உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts