background img

புதிய வரவு

கறுப்பு பண விவகாரம் வெளியானால் காங்கிரசார் முகங்கள் இருண்டு விடும்: நிதின் கட்காரி ஆவேசம்

திப்ருகார்: "வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்த விவரம் வெளியானால், காங்கிரசாரின் முகம் இருண்டு விடும்', என, பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் திப்ருகாரில் நடந்த, பாரதிய ஜனதா கட்சி பேரணியில் கலந்து கொண்டு நிதின் கட்காரி பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டு முறை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முறையும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அது மட்டுமல்லாது லஞ்ச லாவண்ய அதிகரிப்பால் விலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இது மக்களின் மனதில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டில் பணத் தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதை செயல்படுத்துவதை தட்டிக் கழிக்கிறது மத்திய அரசு. நம் நாட்டு ஏழைகளை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்துக்கு வரி கட்டுவதை தவிர்க்க கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்தவர்களின் பெயரை அவர்கள் எப்படி வெளியிடுவார்கள்? இந்த பெயர்கள் வெளியிடப்படுமானால், காங்கிரஸ் தலைவர்களின் முகமெல்லாம் கருப்பாகி விடும்.

"நம் நாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ளவர்களாக உள்ளனர்'என, திட்ட கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே நாட்டில், ஒரு பிரிவினர் ஊழல் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்றவற்றால் ஏழை மக்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் சூழலில் ஏழை மக்கள் எப்படி வாழ முடியும். பொது மக்கள் வாழ்க்கை நடத்துவது பெரும்பாடாக உள்ளது. ஊழல் என்பது இந்த ஆட்சியில் தொடர் கதையாகிவிட்டது. போபர்ஸ், காமன்வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் என ஊழல் பட்டியல் தொடர்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் விலை உயர்வு காணப்படுகிறது, இதற்கு பிரதமர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ் கூறுகிறது. யாருடைய வறுமையை இவர்கள் ஒழிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏழை ஏழையாகவே இருந்து கொண்டிருக்கிறான். வசதி படைத்தவன் வளர்ந்து கொண்டே இருக்கிறான். காங்கிரஸ் கட்சி ஆளும் மத்திய அரசில் மட்டும் ஊழல் இல்லை. அந்த கட்சி ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலின் அடிசுவடு பின்பற்றப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்ற வகையில் பிரசாரம் செய்யப்படுகிறது. நாங்கள் பயங்கரவாதத்துக்கு மட்டுமே எதிரானவர்கள். ஜாதி மதம் பார்க்காமல் நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினரின் முன்னேற்றத்தை தான் பாரதிய ஜனதா விரும்புகிறது. வங்கதேசத்திலிருந்து நம் நாட்டில் ஊடுருபவர்களை எதிர்க்கிறோம். நீங்கள் யாராவது வங்கதேசத்துக்கு சென்று அங்கு நிலத்தையும் சொத்துக்களையும் வாங்க முடியுமா? முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறுவதற்காக வங்கதேச எல்லையை காங்கிரஸ் அரசு திறந்து விட்டுள்ளது. இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts