background img

புதிய வரவு

இந்திய எல்லைக்குள் வந்து மீன் பிடித்த 300 சிறிலங்க மீனவர்களை பிடித்துள்ளோம்: கடலோர காவற்படை

இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்த சிறிலங்க (சிங்கள) மீனவர்கள் 300க்கும் அதிகமானோரை சிறைபிடித்துள்ளதாகவும், அவர்கள் வந்த 60 மீன் பிடி படகுகளையும் பிடித்துள்ளோம் என்றும் இந்திய கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.

1977ஆம் ஆண்டுதான் இந்திய கடற்பகுதியை காப்பதற்கென்று கடலோர காவற்படை உருவாக்கப்பட்டது. அதன் 33வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவைத் தொடர்ந்து கடந்த ஓராண்டில் கடலோர காவற்படையின் கிழக்குப் பிரிவு செய்த பணிகள் என்னவென்பது குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஓராண்டில் இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த சிறிலங்காவின் 65 படகுகளை பிடித்துள்ளோம். அதிலிருந்த 337 மீனவர்களை சிறைபிடித்துள்ளோம், என்று கூறியுள்ள கடலோர காவற்படை அறிக்கை, “இதே ஆண்டில் அவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட, ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டிருந்த சிறிலங்க மீனவர்கள் 455 பேரையும், 88 படகுகளையும் விடுவித்துள்ளோம்” என்று கூறியுள்ளது.

ஆனால், எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்த இந்த 455 பேரில் ஒருவரைக் கூட இந்திய கடலோர காவற்படை துப்பாக்கியால் சுடவில்லை, காயப்படுத்தவில்லை, அவமானப்படுத்தவில்லை. ஆனால், இந்திய எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கச் சென்றார்கள் என்று பல தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்கொ்ல்லப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts