அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிலியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவாகியிருந்தது. உயிர் மற்றும் பொருட்சேதங்கள் இல்லை என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சுனாமி எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் பாதிப்புக்குள்ளான பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வியாழனன்று இரு முறை ஏற்பட்ட நில அதிர்வுகள் உட்பட, கடந்த சில தினங்களாகவே சிலியின் பூகம்ப ஆபத்து பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரியில் வடக்கு சிலியின் கடலோர பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு சுமார் 500 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment