சென்னை : ""ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் சொன்னதால், ஜெயலலிதா ஓய்வெடுப்பதாகக் கூறுகின்றனர். அந்த ஓய்வு, நிரந்தர ஓய்வாகத்தான் அவருக்கு இருக்கப்போகிறது,'' என முதல்வர் கருணாநிதி பேசினார்.
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வில் கொள்கை பரப்புச் செயலராகவும், ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் இருந்து பா.ஜ.,வில் இணைந்தவர் கவிஞர் காசி முத்துமாணிக்கம். அக்கட்சியில் மாநில இலக்கிய அணித் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்த காசி முத்துமாணிக்கம், 2,000 ஆதரவாளர்களுடன், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார். தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இவ்விழாவில் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசும் போது, "எல்லாரும் தாய் கழகத்தில் இணைவர். நான் என் தந்தை கழகத்தில் இணைந்திருக்கிறேன். எனது தந்தை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர். அந்த கட்சியில் சமீபகாலமாக நடைமுறைகள், நடவடிக்கைகள் சரியில்லை. அந்த அதிருப்தியால் தான் இன்று தி.மு.க.,வில் இணைந்திருக்கிறோம்' என்றார்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கவிஞர் காசி முத்துமாணிக்கம் இன்று தி.மு.க.,வில் இணைந்ததாகச் சொன்னார்கள். புதிதாக கட்சியில் இணைந்தார் என்ற உணர்வும் வரவில்லை. எந்த கட்சியில் அவர் இருந்தாலும், எங்களிடம் நெருக்கமாகத்தான் இருந்தார். அதனால், எங்களிடமே இருந்து எங்களிடம் வந்து சேர்ந்திருக்கிறார் என்ற உணர்வு தான் ஏற்படுகிறது. ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னதால், ஜெயலலிதா ஓய்வெடுப்பதாகச் சொல்கின்றனர். அந்த ஓய்வு, நிரந்தர ஓய்வாகத்தான் அவருக்கு இருக்கப் போகிறது. சொத்து குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும். பா.ஜ.,வினர் ஒன்றரை வருடம் காத்திருந்து தி.மு.க.,வில் இணைந்ததாகச் சொன்னார்கள். நாங்களும் அவர்கள் வருகைக்காக ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

0 comments :
Post a Comment