background img

புதிய வரவு

காதலர்களை டிஸ்டர்ப் பண்ணா...!! - சைலேந்திர பாபு எச்சரிக்கை

கோவை: காதலர் தினத்தைக் கொண்டாடும் காதலர்களுக்கு இடையூறு செய்வோர் உடனடியாககக் கைது செய்யப்படுவார்கள் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

அதேநேரம், பொதுமக்கள் முகம் சுழிக்காத வகையில் காதலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கோவையிலும் காதலர் தினம் களைகட்ட தொடங்கியுள்ளது. காதலர்கள் ஒருவருக் கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வதற்கு ரோஜாபூ, வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவது காதலர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சிலர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும் காதலர் தினத்தைக் கொண்டாடுவது தொடர்கிறது.

காதலர் தின கொண்டாட்டமென்பதே, இந்திய - தமிழ் கலாச்சாரத்துக்கு அந்நியமானது, அநாகரீகமானது என்று கூறி இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த இரு தினங்களாக வாழ்த்து அட்டை எரிப்பது, காதலர்களைத் துரத்துவது என போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்று, வரம்பு மீறி ஆங்காங்கே உணர்ச்சி வசப்படும் ஜோடிகளுக்கு தாங்களே திருமணம் செய்து வைக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டங்கள் காரணமாக, பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு காதலர்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில், "கோவையில் நாளை காதலர் தினம் கொண்டாட்டத்தின்போது காதல் ஜோடிகளுக்கு இடையூறு செய்தாலோ, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

கோவை வ.உ.சி. பூங்கா, காந்திபார்க், சிங்காநல்லூர் படகு இல்லம் உள்ளிட்ட பொழுது போக்கு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காதலர் தினம் கொண்டாடுவதும் கொண்டாடாமல் இருப்பதும் அவரவர் இஷ்டம்.

காதலர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். அதே போல் மாநகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருவார்கள். யாரையும் துன்புறுத்தக் கூடாது.

அதேபோல் காதல் ஜோடிகளும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளகூடாது...", என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts