ஸ்தல வரலாறு::
இது சிவஸ்தலம் ஆகும்.இங்கிருக்கும் இறைவனின் பெயர் - கும்பேஸ்வரர் என்றும், இறைவியின் பெயர் - மங்களநாயகி என்றும் அழைக்கப்படுகிறது. கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் இந்த கும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
உலகம் அழியும் நேரம் வந்தபோது, பிரம்மன் தனது படைப்பு ஆற்றல் எல்லாவற்றியும் அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் இட்டு அந்தக் கும்பத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்துவிட்டார். பிரளய காலத்தில் கடல் நீர் பொங்கி இமயமலை உச்சி வரை சென்றபோது, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட கும்பம், நீரில் மிதந்து சென்று பின் பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது.
அவ்வாறு குடம் நின்ற இடத்தைமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான், தரை தட்டிய கும்பத்தின் மீது அம்பைச் செலுத்த, கும்பம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார்.
கும்பம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் வீற்றிருக்கிறார் என்பது வரலாறு. இந்த ஆதிகும்பேஸ்வரர் கோவில் மூன்று கோபுரங்களையும், மூன்று பிரகாரங்களையும் கொண்டுள்ளது.
கிழக்கே உள்ள கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். இந்த இராஜகோபுரம் சுமார் 128 அடி உயரம் கொண்டதாகும். இறைவன் கும்பேஸ்வரர் மண்ணால் ஆன கும்பத்தின் வடிவம் உடையவர் என்பதால் எப்பொழுதும் தங்கக் கவசம் அணிவித்தே அபிஷேகம் நடைபெறுகிறது.
கொடிக் கம்பம் அருகில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சந்நிதி உள்ளது. இக்கோவிலில் ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு முகங்கள் இருந்தாலும் கைகள் மட்டும் 12 இல்லாமல் 6 மட்டுமே உள்ளது. மேலும் இக்கோவிலில் உள்ள சித்திர நடன மண்டபமும் அதிலுள்ள சித்திரங்களும், சிற்ப வேலைப்பாடுகளும் காண கண் கோடி வேண்டும் என்று பார்த்தவர்கள் கூற கேட்கலாம்.
மகாமகக் குளம்::
கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெருமை பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும்.
அன்றைய தினமே மகாமகம் மிக விமர்சையாக கொண்டாப்படுகிறது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும்,பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் வருவார்கள்.. மகாமகக் குளத்தில் நீராடினால் பாவங்கள் போய் விடும் என்று புராணங்கள் கூறுகின்றன.
மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது. இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது.
போக்குவரத்து வசதி:::
இந்த கோவிலுக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கும்பகோணம் செல்ல ரெயில் வசதியும் உள்ளது.

0 comments :
Post a Comment