background img

புதிய வரவு

சிவிசி தேர்வுக் குழுவை தவறாக வழிநடத்தவில்லை: ப.சிதம்பரம்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை (சிவிசி) தேர்வு செய்யும் குழுவை தாம் தவறாக வழிநடத்தவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக தற்போது உள்ள பி.ஜே. தாமஸை அப்பதவிக்கு நியமிப்பதற்கு முன்னர்,பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறி,தேர்வு குழுவை சிதம்பரம் தவறாக வழிநடத்தியதாக மக்களவை எதிர்கட்சித் தலைவரும், தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாற்றியிருந்தார்.

இந்நிலையில், சுஷ்மாவின் இக்குற்றச்சாற்றை இன்று மறுத்த சிதம்பரம், தாம் அவ்வாறு கூறவில்லை என்றார்.

மேலும் சுஷ்மாவின் இந்த குற்றச்சாற்றுக்கு தமது கடும் ஆட்சேபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் டெல்லியி இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts