background img

புதிய வரவு

சிக்கலில் பிரசாந்த் படம்

முதல்வர் கருணாநிதி தொடர்ச்சியாக கதைகள் எழுதி வருகிறார். வசனமும் சேர்த்தி. இளைஞனுக்கு முன்பாக அவர் எழுதிய கதை ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. ச‌ரித்திரக் கதையான பொன்னர் சங்கர்.

பிரசாந்த் ஹீரோவாக நடிக்க தியாகராஜன் இந்தப் படத்தை இயக்குகிறார். மிகப் பிரமாண்டமாக இப்படத்தின் தொடக்க விழாவை வள்ளுவர் கோட்டத்தில் கொண்டாடியதை சென்னைவாசிகள் மறந்திருக்க மாட்டார்கள்.

திருமூர்த்தி அணைக்கட்டுக்கருகில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிரமாண்ட அரங்கும் அமைத்துள்ளனராம். இதற்காக சில மரங்களை வெட்டியிருக்கிறது பொன்னர் சங்கர் டீம். போதாதற்கு அணைக்கட்டுப் பகுதியில் தடைவிதிக்கப்பட்ட தீ விளையாட்டையும் நடத்தியிருக்கிறார்கள். இங்கு தீக்குச்சியே எடுத்துப் போகக் கூடாதாம்.

இந்த விதிமீறல்கள் சமூக ஆர்வலர்களின் காதில்விழ அவர்கள் பிரச்சனையை கிளப்பியிருக்கிறார்கள். அணைக்கட்டிலிருந்து பேக்கப்பாகுமோ என்ற பயத்தில் உள்ளனர் படத்தில் ப‌ணிபு‌ரிகிறவர்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts